அம்மன் பாடல்கள்
கற்பூர நாயகியே
கற்பூர நாயகியே ! கனகவல்லி,
காளி மகமாயி கருமாரியம்மா,
பொற்கோவில் கொண்ட சிவகாமியம்மா,
பூவிருந்த வல்லி தெய்வானையம்மா,
கற்பூர நாயகியே ! கனகவல்லி,
காளி மகமாயி கருமாரியம்மா,
விற்கோல வேதவல்லி விசாலாட்சி
விழிக்கோல மாமதுரை மீனாட்சி
சொற்கோவில் நானமைத்தேன் இங்கு தாயே
சுடராக வாழ்விப்பாய் என்னை நீயே
கற்பூர நாயகியே ! கனகவல்லி,
காளி மகமாயி கருமாரியம்மா,
நெற்றியிலே குங்குமமே நிறைய வேண்டும்,
அம்மா!! நெஞ்சில் உன் திருநாமம் வழிய வேண்டும்,
கற்றதெல்லாம் மேன் மேலும் பெருக வேண்டும்,
பாடும் கவிதையிலே உன் நாமம் உருக வேண்டும்,
கற்பூர நாயகியே ! கனகவல்லி,
காளி மகமாயி கருமாரியம்மா,
காற்றாகி கனலாகி கடலாகினாய்,
கருவாகி உயிராகி உடலாகினாய்ய்,ய்,ய்,
நேற்றாகி இன்றாகி நாளாகினாய்,
நிலமாகி பயிராகி உணவாகினாய்,
கற்பூர நாயகியே ! கனகவல்லி,
காளி மகமாயி கருமாரியம்மா,
தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய்,
தொழுதாலும் அழுதாலும் வடிவாகினாய்,
பொருளோடு புகழோடு வைப்பாய் என்னை.
பொருளோடு புகழோடு வைப்பாய் என்னை.
கற்பூர நாயகியே ! கனகவல்லி,
காளி மகமாயி கருமாரியம்மா,
கருமாரியம்மா…
கருமாரியம்மா…
செல்லாத்தா
செல்லாத்தா செல்ல மாரியாத்தா
எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா
செல்லாத்தா செல்ல மாரியாத்தா
எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா
கண்ணாத்தா உன்னைக் காணாட்டா
இந்த கண்களிருந்து என்ன புண்ணியம் சொல்லாத்தா
உந்தன் பெருமையை இந்த உலகுக்கு எடுத்து பாடாட்டா
இந்த ஜென்மமெடுத்து என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா
செல்லாத்தா செல்ல மாரியாத்தா
எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா
தென்னமரத் தோப்பினிலே தேங்காயப் பறிச்சிகிட்டு
தென்னமரத் தோப்பினிலே தேங்காயப் பறிச்சிகிட்டு
தேடி வந்தோம் உந்தனையே சின்னாத்தா – நாங்கள்
தேடி வந்தோம் உந்தனையே சின்னாத்தா
நீ இளநீர எடுத்துகிட்டு எங்க குறை கேட்டுபுட்டு
இளநீர எடுத்துகிட்டு எங்க குறை கேட்டுபுட்டு
வளமான வாழ்வு கொடு மாரியாத்தா
நல்ல வழி தன்னையே காட்டிவிடு மாரியாத்தா
செல்லாத்தா செல்ல மாரியாத்தா
எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா
பசும்பால கறந்துகிட்டு கறந்தபால எடுத்துகிட்டு
புற்றினிலே ஊற்ற வந்தோம் மாரியாத்தா
நாங்கள் பக்தியுடன் ஊற்ற வந்தோம் மாரியாத்தா
நீ பாம்பாக மாறி….
நீ பாம்பாக மாறி அதை பாங்காக குடித்துவிட்டு
தானாக ஆடிவா நீ மாரியாத்தா
உந்தன் பெருமையை இந்த உலகுக்கு எடுத்து பாடாட்டா
இந்த ஜென்மமெடுத்து என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா
செல்லாத்தா செல்ல மாரியாத்தா
எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா
ஆதி சக்தி மாதா கருமாரி மாதா
எங்கள் ஆதி சக்தி மாதா கருமாரி மாதா
மாரியம்மா எங்கள் மாரியம்மா
வரமளித்து உலகமெல்லாம்
வாழ வைக்க வந்தவளே..
கரம் குவித்து வேண்டுகின்றோம்
காத்திடுவாய் கருமாரி..
காத்திடுவாய் கருமாரி..
மாரியம்மா எங்கள் மாரியம்மா
மாரியம்மா எஙகள் மாரியம்மா
உன்னை வணங்குகின்றோம் கருமாரியம்மா
உன்னை வணங்குகின்றோம் கருமாரியம்மா
மாரியம்மா எங்கள் மாரியம்மா
நேரினிலே நீயிருக்கும் கோவிலிலே வந்து
நெஞ்சமதில் உன்பதமே தஞ்சமென கொண்டு
நேரினிலே நீயிருக்கும் கோவிலிலே வந்து
நெஞ்சமதில் உன்பதமே தஞ்சமென கொண்டு
கோரும் வரம் யாவும் தந்திடுவாய் என்று
கோரும் வரம் யாவும் தந்திடுவாய் என்று
கூறுதம்மா அன்பர்திரு கூட்டமெல்லாம் இங்கு
கூறுதம்மா அன்பர்திரு கூட்டமெல்லாம் இங்கு
மாரியம்மா எங்கள் மாரியம்மா
உன்னை வணங்குகின்றோம் கருமாரியம்மா
மாரியம்மா எங்கள் மாரியம்மா
திருச்சாம்பல் அணிந்து
வந்தால் மனமும் மகிழுதாம்
தீராத நோய்களையும் தீர்த்து வைக்குதாம்..
திருச்சாம்பல் அணிந்து
வந்தால் மனமும் மகிழுதாம்
தீராத நோய்களையும் தீர்த்து வைக்குதாம்..
வருவார்தம் வாழ்வில்
எல்லா வளமும் பெருகுதாம்
வருவார்தம் வாழ்வில்
எல்லா வளமும் பெருகுதாம்
வாழ்த்துகின்ற மனதில்
என்றும் இன்பம் தருவதாம்
உன்னை வாழ்த்துகின்ற மனதில்
என்றும் இன்பம் தருவதாம்
மாரியம்மா எங்கள் மாரியம்மா
உன்னை வணங்குகின்றோம் கருமாரியம்மா
மாரியம்மா எங்கள் மாரியம்மா
உன்னை வணங்குகின்றோம் கருமாரியம்மா
உன்னை வணங்குகின்றோம் கருமாரியம்மா..
தாயே கருமாரி
தாயே கருமாரி எங்கள் தாயே கருமாரி
தேவி கருமாரி துணை நீயே மகமாயி
தாயே கருமாரி எங்கள் தாயே கருமாரி
தேவி கருமாரி துணை நீயே மகமாயி
ஆயிரம் கண்கள் உடையவளே
ஆலயத்தின் தலைமகளே
ஆயிரம் கண்கள் உடையவளே
ஆலயத்தின் தலைமகளே
கடைக்கண்ணாளே பார்த்தருள்வாய்
காலமெல்லாம் காத்தருள்வாய்
கடைக்கண்ணாளே பார்த்தருள்வாய்
காலமெல்லாம் காத்தருள்வாய்
தாயே கருமாரி
எங்கள் தாயே கருமாரி
அன்னை உந்தன் சன்னதியில்
அனைவரும் ஒன்றாய் கூடிடுவோம்
அன்னை உந்தன் சன்னதியில்
அனைவரும் ஒன்றாய் கூடிடுவோம்
அம்மா உந்தன் பொன்னடியில்
அனுதினமும் சரணடைவோம்
அம்மா உந்தன் பொன்னடியில்
அனுதினமும் சரணடைவோம்
தாயே கருமாரி
எங்கள் தாயே கருமாரி
சிங்கமுக வாகனத்தில்
சிங்கார மாரியம்மா
சிங்கமுக வாகனத்தில்
சிங்கார மாரியம்மா
வந்துவரம் தந்திடுவாய்
எங்கள் குலதெய்வம் அம்மா
வந்துவரம் தந்திடுவாய்
எங்கள் குலதெய்வம் அம்மா
தாயே கருமாரி
எங்கள் தாயே கருமாரி
தேவி கருமாரி
துணை நீயே மகமாயி
தாயே கருமாரி
எங்கள் தாயே கருமாரி
தேவி கருமாரி
துணை நீயே மகமாயி
கருணை உள்ளம் கொண்டவளே
கருணை உள்ளம் கொண்டவளே கருமாரியம்மா… அம்மா
கருணை உள்ளம் கொண்டவளே கருமாரியம்மா
உன் கடைக் கண்ணால் நலம்
கொடுப்பாய் அருள் மாரியம்மா
அருள் மாரியம்மா – அம்மா
கருணை உள்ளம் கொண்டவளே கருமாரியம்மா…
கரகம் எடுத்து ஆடி வந்தோம்…
காணிக்கை செலுத்த நாடி வந்தோம்..
கரகம் எடுத்து ஆடி வந்தோம்…
காணிக்கை செலுத்த நாடி வந்தோம்…
கரங்கள் குவித்து பாடி வந்தோம்
வரங்கள் குறித்து தேடி வந்தோம் – அம்மா
கருணை உள்ளம் கொண்டவளே கருமாரியம்மா
குத்து விளக்கை ஏற்றி நின்றோம்…
எங்கள் குல விளக்கை போற்றி நின்றோம்…
குத்து விளக்கை ஏற்றி நின்றோம்…
எங்கள் குல விளக்கை போற்றி நின்றோம்…
முத்துமாரி உனை பணிந்தோம்
பக்தி கொண்டோம் பலன் அடைந்தோம் – அம்மா
கருணை உள்ளம் கொண்டவளே கருமாரியம்மா
அன்ன வாகனம் அமர்ந்து வந்தாய்…
அம்மா எங்களுக்கருள வந்தாய்…
அன்ன வாகனம் அமர்ந்து வந்தாய்…
அம்மா எங்களுக் கருள வந்தாய்…
புன்னகை முகம் கொண்டவளே
பொன்மலர் பாதம் தந்தவளே – அம்மா
கருணை உள்ளம் கொண்டவளே கருமாரியம்மா